தனக்கு பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர் மருத்துவமனையில் பாம்புடன் வந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒருவர் தன்னை பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி கையில் பாம்புடன் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒரு நபர் கையில் பாம்புடன் வந்ததால் மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கே இருந்தவர்கள் அந்த நபரிடம் என்ன என்று கேட்டபோது, தனக்கு பாம்பு கடித்துவிட்டது என்றும் ஊசி போட்டுக்கொண்டு போய்விடுகிறேன் என்று கூறினார். இதைஅடுத்து, அங்கே இருந்தவர்கள், பாம்புடன் மருத்துவமனைக்கு உள்ளே போகக்கூடாது. எல்லோரும் பயப்படுவார்கள். யாராவது பாம்பை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வருவார்களா என்று கேட்டு அவரை அனுப்பி வைத்தனர்.
மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவனைக்கு, ஒருவர் கையில் பாம்புடன் வந்து தனக்கு பாம்பு கடித்துவிட்டது ஊசி போடுக்கொண்டு போய்விடுகிறேன் என்று கூறும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”