சண்டிகர்:
பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்தல் நடை பெறுகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியின் பெயரை நேற்று ராகுல்காந்தி அறிவித்தார். இதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
காங்கிரஸின் அறிவிப்பு குறித்து பதிலளித்துள்ள மத்திய மந்திரியும், பஞ்சாப் பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத், ஏற்கனவே அழிந்து விட்ட கட்சியின் தலைவிதியில் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தவறான ஆட்சி, பரவலான ஊழல் உள்கட்சி பூசல் போன்றவற்றால் காங்கிரஸ் கட்சி சிதைந்து கிடக்கிறது, இப்போது ஒரு அதிசயம் கூட அதைக் காப்பாற்ற முடியாது. ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதால் கட்சியின் தலைவிதியை ஒருபோதும் மீட்க முடியாது.
அதே நேரத்தில் இந்த அறிவிப்புக்குப் பிறகு கட்சியில் உட்பூசல் மேலும் தீவிரமடையும்.எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, சில காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசில் நிலவும் ஊழல் குறித்து பொதுவெளியில் கூறுகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…பாகிஸ்தானை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் மூன்று பேர் சுட்டுக் கொலை