பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஜனவரி மாதம் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அவரின் உடல்நிலை மோசமானது. இந்நிலையில் இன்று காலை
லதா மங்கேஷ்கர்
காலமானார். அவர் இறந்த தகவல் அறிந்த திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவின் நைட்டிங்கேல் சென்றுவிட்டார். ஆனால் அவரின் குரல் மூலம் இந்த உலகம் இருக்கும் வரை வாழ்வார் என்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் ஆமீர் கானின் ரங் தே பசந்தி பட செட்டில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு பாடகி சினிமயி கூறியிருப்பதாவது,
ரங் தே பசந்தி. அவருக்கு போட்டோகிராஃபி பிடிக்கும் என்பது பலருக்கும் தெரியாது என நினைக்கிறேன். அவரிடம் பல ப்ரொஃபஷனல் கேமராக்கள் இருந்தது. அன்று கூட அவர் புது கேமரா வாங்கியது பற்றி தான் பேசினார் என்றார்.
60 ஆண்டு கால கெரியரில் லதா மங்கேஷ்கருக்கு பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை கேட்டு அழுத பெற்றோர்