இலங்கையில் தமிழக மீன்பிடி படகுகள் ஏலம்
தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் மீறி ஏலம்
இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீன்பிடி விசைப் படகுகள் இன்று ஏலம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல்
இராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம்
நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் இன்று காலை 9 மணி முதல் ஏலம் விடப்படுகிறது
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர் கடற்படை முகாமில், தமிழக படகுகள் ஏலம் விடப்படுகின்றன
ஏலத்தில் கொழும்பிலுள்ள இலங்கை மீன்வளத்துறை உயர் அதிகாரிகள், யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பு
இந்திய அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் எதிர்ப்பை மீறி, இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்
யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர் கடற்பனை முகாமில், இலங்கை கடற்படை அதிகாரிகள் முன்னிலையில் படகுகள் ஏலம்
தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி படகுகள் ஒவ்வொன்றும், பல லட்சக்கணக்கான ரூபாய் விலை மதிப்பு கொண்டவை ஆகும்
கச்சத்தீவு அருகே இந்திய பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குவதும், பறிமுதல் செய்வதும் தொடர்கிறது