நடிகர்
தனுஷ்
மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பேச்சுதான் தற்போது சமூகத்தளத்தில் நடந்து வருகிறது. காதலித்து திருமணம் ஆன இவர்கள் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு தற்போது பிரிந்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. இருப்பினும் இவர்களை மீண்டும் சேர்த்துவைத்து விடலாம் என இவர்களது குடும்பத்தார்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இன்றுவரை அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா என தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுபோக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தனுஷ் தான் நடிக்கும் படங்களில் நடிகையுடன் நெருக்கம் காட்டுவது ஐஸ்வர்யாவிற்கு பிடிக்கவில்லை, அதனால் அதான் விவாகரத்து வரை சென்றது என சிலர் கருத்துதெரிவித்து வருகின்றனர்.
சிலரோ குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் இவர்கள் பிரிந்தார்கள் என்கின்றனர். ஆனால் உண்மையான காரணம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கே தெரியும். எனவே பலர் பலவிதமான கருத்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது தனுஷ் ஒரு நடிகையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.
இப்படி ஒரு பிரச்சனைல மாட்டிகிட்டாரே தனுஷ்..!இனி என்ன செய்யப்போறாரோ?
பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான ரம்யாவுடன் தனுஷ் எதுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. அதில் தனுஷ் ஜகமே தந்திரம் பட கெட்டப்பில் இருக்கிறார். இதனால் இப்புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து என்பது தெரிகிறது. இருந்தாலும் அதை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருவது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக இருப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
தனுஷ்
ஏற்கனவே தனுஷ் மற்றும்
ஐஸ்வர்யா
விவகாரம் ஓடிக்கொண்டிருக்க இந்தமாதிரி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் பிரச்சனையை மேலும் பெரிதாக்குகின்றனர் என்பது பொதுவான கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா வாரியாரின் லேட்டஸ்ட் வீடியோ!