வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங் : “சீனாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தானுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும்,” என, பாக்., பிரதமரிடம், சீன பிரதமர் லி கெக்கியாங் கூறினார்.
நம் அண்டை நாடான சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. துவக்க விழாவில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன தலைநகர் பீஜிங்கிற்கு வந்தார். இதற்கிடையே சீன தலைவர்களையும், அவர் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் சீன பிரதமரான லி கெக்கியாங்கை, நேற்று இம்ரான் கான் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, சீன பிரதமர் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர். அதில், ஜம்மு – காஷ்மீர் விவ காரம் குறித்தும், இம்ரான் கான் பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்போது பேசிய சீன பிரதமர் கெக்கியாங், “சீனாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தானுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும்,” என்றார்.
இம்ரான் கான் கூறுகை யில், “பாகிஸ்தானில் மேற் கொள்ளப்படும் சீன அரசு திட்டங்களுக்கும், அங்குள்ள சீன நாட்டினருக்கும் பாதுகாப்பான சூழலை உறுதிபடுத்த பாக்., அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்,” என, வாக்குறுதி அளித்தார்.
Advertisement