தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக விலகி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் “அடுத்த 11 நாட்கள் போர்களம் போல் இருக்கும். என்ன நடந்தாலும் பாஜக வேட்பாளர்கள் தளர்ந்து விடக்கூடாது. ஒரு நாள் தமிழகத்தில் தாமரை மலரும். போர்க்களத்தில் பாஜக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் முழுமூச்சாக பணியாற்ற வேண்டும். இந்த முறை நகராட்சி தேர்தலில் பாஜக மிகத் திறமையானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.