தற்போது நடைபெறும் உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சாத்திகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகளுக்கு விசேட அறிக்கை ஒன்றை பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ளார்.
இதற்கமைவாக இவ்வாறான பரீட்சாத்திகள் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் உள்ள வைத்தியசாலை மற்றும் இடை நிலை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும்.
இந்த மத்திய நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளான அனைத்து பரீட்சாத்திகளும் இந்த விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் தவிர்ந்த ஏனைய எந்த இடங்களிலும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் கூறினார்.
பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தப்படும், தொற்றுக்குள்ளாகும் பரீட்சாத்திகள் பரீட்சை அனுமதி அட்டையில் தமக்கு குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையம் அமைந்துள்ள விசேட பரீட்சை அறையில் பரீட்சை எழுத முடியும்.
சம்பந்தப்பட்ட பரீட்சாத்திகள் தாம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்க வேண்டும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.