புதுடெல்லி:
மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனாவுக்கு பிறகு இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
ஏழைகளை லட்சாதிபதியாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏழைகளுக்கும் வங்கி கணக்கு வசதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இன்று ஏழ்மையிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு எரிவாயு சிலிண்டர் வசதி கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
1967ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை.
தெலுங்கானா உருவாக்கப்பட்டதற்கு பிறகு மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்மக்கள் வாய்ப்பு அளிக்கவில்லை.
மிகப் பழமையான காங்கிரஸ் கட்சி இன்று பல மாநிலங்களில் ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சியும் தோல்வி பற்றி கவலைப்படவில்லை. கண்மூடித்தனமான விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது. கொரோனா காலத்திலும் காங்கிரஸ் கட்சி எல்லைமீறி அரசியல் செய்தது.
நேர்மையானவர்கள், சேவை செய்பவர்கள் யார் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. நாடகம் ஆடுகிறது – அண்ணாமலை கடும் தாக்கு