அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள உலக நாடுகளிடம் அந்நாடு பொருளாதார உதவி கோரி வருகிறது.
இந்திய அரசும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக, இலங்கைக்கு கடனாக 3,730 கோடி ரூபாய் வழங்குவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டில்லி அவர் இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.
பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு மாதம் லீவு… மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இந்த சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக, நீண்ட காலமாக நிலவி வரும் இந்திய மீனவர்களின் பிரச்னை குறித்தும், இந்த சந்திப்பின்போது இரு அமைச்சர்களுக்கு விரிவாக ஆலோசித்தனர் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.