வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்காத இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நவ்தீப் சைனியும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று அகமதாபாத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடைபெற்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒரு நாள் போட்டி அதே அகமதாபாத் மைதானத்தில் பிப்ரவரி 9ம் திகதி நடைபெறவிருக்கிறது.
முதல் ஒரு நாள் போட்டிக்கு முன்னதாக அகமதாபாத் வந்த ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும், நான்கு பயிற்சி ஊழியர்கள் மற்றும் காத்திருப்பு பட்டியிலில் இருந்த சைனி ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.
இதனையடுத்து, மயங்க அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார், எனினும் அவர் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்கவில்லை.
அதேவேளை, தனிப்பட்ட காரணங்களுக்காக கே.எல்.ராகுல் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை.
இதனால், முதல் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதல் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவனில், ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் விளையாடினர்.
தற்போது அகமதாபாத்தில் உள்ள இந்திய அணியில் இணைந்த கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் சைனி ஆகியோர் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Look who are here! 🙌
The trio has joined the squad and sweated it out in the practice session today. 💪#TeamIndia | #INDvWI | @Paytm pic.twitter.com/Nb9Gmkx98f
— BCCI (@BCCI) February 7, 2022
இந்நிலையில், 3 வீரர்கள் இணைந்துள்ள நிலையில், 2வது ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவனில் யார் யார் ஓரங்கட்டப்படுவார்கள், யார் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.