தமிழ் சீரியலில் கனிகா
பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான கனிகா, அதன் பிறகு தமிழ், மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரை பக்கம் வந்தார். தொகுப்பாளினியாக இருந்தவர் திருவிளையாடல் என்ற தொடரில் நடித்தார். அதன்பிறகு மலையாளத்தின் பக்கம் சென்றார். அங்கு படங்களிலும், தொடர்களிலும் நடித்தார். தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்நீச்சல் என்கிற தொடரில் நடிக்கிறார்.
ஒரு காலத்தில் பெண்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்ட கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இந்த தொடரை இயக்குகிறார். குடும்பத்துக்காக சமூகத்தில் எதிர்நீச்சல்போடும் ஒரு பெண்ணை பற்றியது.
இதில் ஜனனி என்கிற லீட் கேரக்டரில் மதுமிதா நடிக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமான ஹரிப்பிரியா, தொகுப்பாளினியாக பணியாற்றிய டிடியின் சகோதரி பிரியதர்ஷினி ஆகியோருடன் நடிகை கனிகாவும், நடிகர் மாரிமுத்துவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இந்த தொடர் இன்று (பிப்ரவரி 7) முதல் ஒளிபரப்பாகிறது. வாரம்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு முன்னணி சேனலில் ஒளிபரப்பாகிறது.