முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் அண்ட்ரூ சைமண்ட்ஸ் ரகளையான சம்பவம் குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சஹால் இந்தியா பங்குபெறும் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றியவர்களுடன் நேர்காணல் செய்து அந்த போட்டியின் இறுதியில் அதனை பிசிசிஐ வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கு பெரும் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் ரகளையான சம்பவம் குறித்த தகவலை சைமண்ட்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரராக விளையாடி வரும் சாஹல் அதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்தார்.
அப்போது கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி வென்று சாதனை படைத்தது. இதன் வெற்றி கொண்டாட்டத்தில் அணியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ சைமன்ஸ் தம்மை கை கால்களை கட்டி போட்டு விட்டதாக சஹால் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்குப் பின்னர் நிகழ்ந்த பார்ட்டியில் நான் நிறைய ப்ரூட் ஜாஸ் குடித்திருந்தேன். அப்போது விளையாட்டாய் எனது கைகளை சைமண்ட்ஸ் கட்ட மற்றொரு வீரரான ஜேம்ஸ் பிராங்க்ளின் எனது கால்களை கட்டி விட்டார். அதன்பின் முடிந்தால் விடுவித்துக்கொள் என கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டார்கள்.
ஆனால் அவர் எனது வாயை டேப்பால் ஓட்டி விட்டதை மறந்து விட்டு சென்று விட்ட நிலையில் இறுதியில் அடுத்தநாள் காலை அறையை சுத்தம் செய்பவர் வந்து என்னை அதில் இருந்து விடுவித்தார் என சைமண்ட்ஸ் கூறியதாக சஹால் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தனக்கு மிகச்சிறந்த நண்பர் என்றும், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போதெல்லாம் அவரின் வீட்டுக்கு சென்று வருவேன் என மகிழ்ச்சியுடன் சாஹல் தெரிவித்துள்ளார்.