சுகுமார்
இயக்கத்தில்
அல்லு அர்ஜுன்
நடிப்பில் உருவான படம் ‘
புஷ்பா
‘. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இரண்டு பாகங்களாக தயாரித்துள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
‘புஷ்பா’ படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டிருந்தது. இந்தப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்திருந்தார்.
மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். ‘புஷ்பா’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது. இந்தப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் மற்றும் விமர்சனரீதியாக ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றது.
தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த ‘அந்த’ அறிவிப்பு: வெளியான பரபரப்பு தகவல்..!
இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல தெலுங்கு இலக்கியவாதியான
கரிகாபதி நரசிம்ம ராவ்
சமீபத்தில் தொலைகாட்சி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘புஷ்பா’ படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ‘புஷ்பா’ போன்ற படங்கள் சமூகத்தில் நடக்கும் பல அக்கிரமங்களுக்கு முக்கியக் காரணம். அப்படம் ஒரு மோசமான முன்னுதாரணத்தை விதைக்கிறது. ஒரு கடத்தல்காரனை ஹீரோவாக முன்னிறுத்துகிறது.
படத்தில் யாரையாவது ஒருவரை அடித்து வீழ்த்தும்போதெல்லாம் அவர் ‘நான் யாருக்கும் அடங்காதாவன்’ என்று கூறுகிறார். ரசிகர்களும் அவரை மாஸ் ஹீரோ எனக் கொண்டாடுகிறார்கள். யாராவது ஒருவர் ரோட்டில் போகும் ஒருவரை அடித்துவிட்டு அப்படிச் சொன்னால் இப்படத்தின் இயக்குநரோ அல்லது ஹீரோவோ அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்களா? இப்படம் மட்டுமல்ல பொழுதுபோக்கு என்ற பெயரில் பல படங்கள் இந்த முட்டாள்தனத்தை செய்கின்றன. இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார்.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?