பிராடிஸ்லாவா,
31 வயதான தடகள வீரர் போரிஸ் ஓரவேவ் பால் ஹாக்கியில் நான்கு முறை உலக சாம்பியன், ரெட் புல் ஐஸ் கிராஸ் தடகள வீரர் மற்றும் கிராஸ்-ஃபிட் விளையாட்டு வீரர்.
இவர் தனது டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் அவர் தனது குளிர்ந்த நீர் நீச்சல் திறமையைக் காட்ட முயற்சித்தது பார்வையாளர்களை பதற்றமடைய செய்துள்ளது.
போரிஸ் ஓரவேவ் உறைந்த ஏரியின் அடியில் நீச்சல் சாகசம் நிகழ்த்தும் போது வழி திரும்பி திசை மாறி பீதியை கிளப்பினார். அவரது நண்பர்களும் குழு உறுப்பினர்களும் ஆக்ஸிஜன் தீர்ந்துபோகும் முன் அவரை பாதுகாப்பாக வழிநடத்தினர்.
போரிஸ் பனிக்கட்டியின் கீழ் சீராக நீந்தினார், அவர் திடீரென்று தனது திசை மாறி சென்றார். வலதுபுறம் திரும்பிய அவர், தான் தவறான திசையில் செல்வதை உணர்ந்து வேறு வழியில் சென்றார். அவரது குழு உறுப்பினர்கள் அவரை நேராக செல்லும்படி அறிவுறுத்தினர்.
போரிஸ் தனது வழியைக் கண்டுபிடிக்க போராடும்போது அவரது குழு உறுப்பினர்கள் பீதியடைந்தனர். அவர்களில் ஒருவர் பனிகட்டியை உடைக்கும் முயற்சியில் குதித்தார். அதிர்ஷ்டவசமாக, போரிஸ் தனது வழியைக் கண்டுபிடித்து, அவர் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இன்ஸ்டாகிராமில் 192,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் டிக்டோக்கில் மில்லியன் கணக்கான பார்வைகளையும் சேகரித்துள்ளது.