WhatsApp குழுவில் வந்த காணொளிகள்! – இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் சிறை தண்டனை



வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்த இலங்கை நாட்டவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியாகச் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதைக் காட்டும் 25 காணொளிகளைத் தமது கைபேசியில் வைத்திருந்த 25 வயதான கொலம்பகே தனுஷ்கா சமாரா பெரேரா என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மற்றும் ஒரு இலங்கையரான ஹிண்டாகும்புரே ஷரிந்து தில்ஷன் ராஜபக்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக The Straits Times செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை நாட்டவர்கள் பலரைக் கொண்ட வாட்ஸ்அப் குழு ஒன்றைத் தாம் தொடங்கியிருப்பதாக கொலம்பகேயிடம் ஷரிந்து தில்ஷன் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டில் தொடங்கிய அந்த வாட்ஸ்அப் குழுவில் கொலம்பகே இணைந்தார்.

சொந்த நாட்டு நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அந்த குழு தொடங்கப்பட்டது.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஆபாசக் காணொளிகள் அதில் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வாட்ஸ்அப் குழுவில் ஆபாசக் காணொளிகள் வலம் வருவது தெரிந்தும் கொலம்பகே அதில்­இருந்து வெளியேறவில்லை.

ஆபாசக் காணொளிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது தமது கைபேசியில் பதிவான ஆபாசப் படங்களை நீக்க முயன்றதை கொலம்பகே ஒப்புக்கொண்டதாக அரச சட்டத்தரணி கூறியுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.