தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். ஜனவரி 17ம் தேதி இரவு தங்கள் பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.
மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி தொடர்ந்து கூறி வருகிறாராம். தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வருகிறது.
இதற்கிடையே மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் எண்ணம் இல்லை என்கிறாராம் தனுஷ். இந்நிலையில்
தனுஷ்
பற்றி நட்பு வட்டாரத்தில் கூறப்படுவதாவது,
தனுஷ் சும்மாவே குடும்ப விஷயத்தை பற்றி பேச மாட்டார். ரொம்ப அமைதியான ஆள். அவர் மனதில் என்ன ஓடுகிறது என்றே தெரியாது. தற்போது விவாகரத்து பிரச்சனை வேறு. கண்டிப்பாக அவர் என்ன நினைக்கிறர் என்றே தெரியவில்லை.
அவர் மனதில் இருப்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்கிறார்கள்.
மனைவியை பிரிந்த கையோடு அடுத்தடுத்து புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு வருக்கிறார் தனுஷ். தன் கவனத்தை திசை திருப்பே இப்படி செய்கிறாராம்.
முன்னதாக ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ்ந்த போதும் பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை கேட்டு அழுத பெற்றோர்
ரஜினி தவிர்த்து தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவும் தன் மகன் வாழ்க்கையை சரி செய்ய முயற்சி செய்கிறாராம். ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து தான் வாழ்ந்து பாரேன் என்று கஸ்தூரி ராஜா சொன்னதை கேட்டு தனுஷ் கடுப்பாகிவிட்டாராம்.
என் திருமண வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகளாக என்ன நடந்தது என்று நான் உங்களிடம் கூறியதே இல்லை. இப்போ கேளுங்கள் என்று 30 மணிநேரம் பேசினாராம். இதெல்லாம் ஒன்னுமே இல்லை, நான் முழுவதையும் கூறினால் தாங்க மாட்டீர்கள் என்று தனுஷ் சொன்னதை கேட்டு அவரின் பெற்றோர் அழுதுவிட்டார்களாம்.