உலகின் வேகமான கேமிங் மானிட்டர்…!

பெய்ஜிங்,
தொழில்நுட்ப நிறுவனமான பீஜிங் ஓரியண்டல் எலக்ட்ரானிக்ஸ்(பி ஓ இ) ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் உலகின் முதல் 500 ஹெர்ட்ஸ் கேமிங் மானிட்டரை உருவாக்கியுள்ளது. இது விரைவில் விளையாட்டு வீரர்களுக்கு மென்மையான கேமிங் அனுபவத்தை வழங்கும் என்று சீன வலைத்தளமான சினாவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்ட மானிட்டர் முன் மாதிரியானது 27-இன்ச் முழு எச்டி பேனல் ஆகும், இது உயர் மொபிலிட்டி ஆக்சைடு பேக் பிளேனைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது, இது வெறும் 1மில்லிசெகண்ட் பதில் நேரத்துடன் அதிக ரீபிரஷ் ரேட்டில் செயல்படுகிறது.
உயர் மொபிலிட்டி ஆக்சைடு பேக்பிளேனை இயக்கும் காப்பர் இன்டர்கனெக்ட் ஸ்டாக் கட்டமைப்புகளை செயல்படுத்துவதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. பேனல் தொழில்நுட்பம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், வெர்ஜ் அறிக்கையின்படி இது ஆக்சைடு டிஎப்டி பேனலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதில் உயர் ரீபிரஷ் ரேட் தவிர, பேனல் துல்லியமான 8-பிட் வெளியீடு மற்றும் 8-லேன் டிஸ்ப்ளே போர்ட் சிக்னலுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த மானிட்டர் 500 ஹெர்ட்ஸ் ரீபிரஷ் ரேட்டை கொண்டதால் முதல் இடத்தைப் பெறுகிறது, அதேசமயம் பல ஆசஸ், ஏலியன்வேர் மற்றும் ஏசர் மாடல்கள் அதிகபட்சமாக 360ஹெர்ட்ஸ் வரை வழங்குகின்றன.
மேலும், அதிக ரீபிரஷ் ரேட்டை கொண்ட மானிட்டர் சந்தைக்கு வருவதற்கு சிறிது நேரம் ஆகலாம், குறிப்பாக வணிகரீதியாகக் கிடைக்கும் பெரும்பாலான ஜிபியுகள் 500 ஹெர்ட்ஸ் ரீபிரஷ் ரேட்டை மற்றும் ஃபிரேம்ரேட்டுகளை வழங்கும் திறன் கொண்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பீஜிங் ஓரியண்டல் எலக்ட்ரானிக்ஸ்(பி ஓ இ) நிறுவனம் இது ஒரு முன்மாதிரி மட்டுமே என்றும், இந்த மானிட்டரை பெருமளவில் உற்பத்தி செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது போன்ற ஒரு மானிட்டர் நிச்சயமாக விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.