வாஷிங்டன் : உலகின் 13 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் குறித்து அமெரிக்க தகவல் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த, ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற தகவல் ஆய்வு நிறுவனம், சர்வதேச தலைவர்கள் குறித்து கருத்துக் கணிப்பு நடத்துகிறது. கருத்துக் கணிப்புஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 13 நாட்டு தலைவர்கள் குறித்து இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது. சமீபத்தில் அந்த நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
அதில், பிரதமர் நரேந்திர மோடி 72 சதவீத ஆதரவு பெற்று மூன்றாவது ஆண்டாக முன்னிலை வகிக்கிறார்.இவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடார் 64 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடம் வகிக்கிறார். இத்தாலி பிரதமர் மரியோ திராகி 57 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.கடைசி இடம்அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் 41 சதவீத வாக்குகளுடன் பின்னுக்கு தள்ளப்பட்டனர். இந்த பட்டியலில் 26 சதவீத ஆதரவுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Advertisement