கொரோனாவின் மூன்றாம் அலை பரவல் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன.
நேரடி வகுப்புகள்
ரத்தான நிலையில். மாணவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்பின் மூலம் கல்வி பயின்று வந்தனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து டில்லி தொடங்கி தமிழ்நாடு வரை பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பஞ்சாப்
மாநிலத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், நர்சிங் கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், பாலிடெக்னிக்குகள், நூலகங்கள் என அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை தற்போது நாடு முழுவதும் பல மாநிலங்களில் குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்திலிருந்து படிப்படியாக குறைந்து தற்போது 83 ஆயிரத்து 876 என்ற அளவில் பதிவாகியுள்ளது.