Tamil Nadu Assembly News, Tamil Nadu Assembly LIVE Updates, 08 February 2022-தமிழக சட்டசபையில் இன்று நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபையின் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் கிராமப்புறங்களைச் சேர்ந்த தமிழக மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடிவதில் சிரமப்படுவதாக கூறி நீட் தேர்வை செய்ய சட்டசபையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆளுநர் அந்த மசோதா, சமூக நீதிக்கு எதிரான மசோதா எனக் கூறி தமிழக அரசுக்கு மீண்டும்
அனுப்பியது. மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.
இதுவரை தமிழ்நாடு சட்டசபை சிறப்புக் கூட்டம் கடந்த 10 ஆண்டுகளில் 4 முறை கூடியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்துவது தொடர்பாக எழுந்த அரசியல் சூழ்நிலையில், தமிழக அரசின் உரிமையை நிலை நிறுத்தும் வகையில் சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2013இல் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2017இல் கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.