ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 2021 ஜூலை முதல் டிசம்பர் வரை 35 மான்கள் இறந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
இதில், இரண்டு மான்கள் காசநோயாலும், இரண்டு மான்கள் பலவீனத்தாலும், நான்கு பல்வேறு நோய்களாலும், நான்கு மான்கள் பிளாஸ்டிக் உட்கொண்டதாலும் இறந்தன என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கு கடித்த அடையாளங்கள் இருந்தன. சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக வனத்துறைக்கு அனுப்பப்படாததால், மீதமுள்ள இறப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
சென்னை ஐ.ஐ.டி., வளாகம், 617 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், மான்கள் உட்பட பல உயிரினங்கள் உள்ளன.
இதற்கிடையே, 2019 முதல் 2020 வரை 55க்கும் மேற்பட்ட மான்களை கொன்றுவிட்டதாக கூறி, 188 தெருநாய்களை சிறைபிடித்து வளாகத்தில் உள்ள பூங்காவில் வைத்தது அக்டோபர் 2020-இல் செய்திகளில் வந்தது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளில், சுமார் 50 நாய்கள் இறந்தன, 40 தத்தெடுக்கப்பட்டன மற்றும் 41 தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் மீட்கப்பட்டன.
மீதமுள்ளவை குறித்து எந்த தகவலும்/பதிவுகளும் இல்லை.
ஜனவரி 8, 2022 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்தியாவில் கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, மெட்ராஸ் ஐஐடி- வளாகத்தில் சுமார் 22 நாய்கள் இருப்பதாகக் கூறியது.
கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு கண்காணிப்பு குழு உறுப்பினர் ஸ்ருதி வினோத் ராஜ் கூறுகையில், “ஆறு மாதங்களில் 35 மான்கள் இறந்திருப்பது கவலை அளிக்கிறது. மோசமான கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் காரணமாக ஐஐடி- வளாகம் மான்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதை இது காட்டுகிறது.
மனுதாரரும், விலங்கு ஆர்வலருமான அருண் பிரசன்னா, “மான் இறப்பை ஒழிக்க மெட்ராஸ் ஐஐடி- நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மரணம்/விபத்து குறித்தும் அறிவிக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புள்ளிமான் மற்றும் கலைமான்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக உள்ளன.
எனவே இந்த மரணங்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 14 சடலங்கள் மட்டும் ஏன் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன என்பதையும் விசாரிக்க வேண்டும்.
மேலும் நிறுவனம் மாசுபாட்டையும், கட்டுமானத்தையும் குறைக்க வேண்டும். தற்போதுள்ள 7,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், என்றார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வாரம் வரும் நிலையில், எந்த காரணமும் இல்லாமல் நாய்களை சிறைபிடித்து, வளாகத்தில் உள்ள பூனைகளுக்கு உணவளிக்கும் நாய் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை, தொடர்ந்து துன்புறுத்துவதற்காக மெட்ராஸ் ஐஐடி மீது நடவடிக்கை எடுக்க ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் 96 மான்கள், 2019 இல் 79, 2020 இல் 83 மற்றும் 2021 இல் 53 மான்கள் மரணமடைந்துள்ளதாக மெட்ராஸ் ஐஐடி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனவரி 7, 2022 அன்று வனவிலங்கு அதிகாரிகளால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டபடி, “மான்-நாய் கடியால், மான் இறப்புகள் 2020 இல் 28 இல் இருந்து, 2021 இல் 5 ஆகக் குறைந்துள்ளது”
மேலே உள்ள தரவுகளில் நாய்-கடியால் காயம்பட்ட மான்கள், வனவிலங்கு துறையால் சிகிச்சைக்காக வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்று அது மேலும் கூறியது.
இதற்கிடையே, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும், வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ள ஐஐடி-மெட்ராஸ், பல்லுயிர் மற்றும் மான்களுக்கு பாதுகாப்பாக வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
“ “