அமெரிக்க ஈரான் பிரச்சனை என்பது ஊரறிந்த விஷயம். அதிலும் முன்னாள் அதிபர் டொனால்டு டிராம்புக்கு ஈரானின் மீது அவ்வளவு தனிப்பட்ட பாசம். அவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் தான் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது.
மேலும் ஈரானுடன் யாரும் வர்த்தகம் செய்தால் அவர்கள் மீதும் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அச்சுறுத்தினார். இதன் காரணமாக அமெரிக்காவுடன் பிரச்சனை வேண்டாம் என்று, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஒதுங்கின.
இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகளுக்கு பெரும் நஷ்டமே என்றாலும், டிரம்பின் கோபத்துக்கு ஆளாக எந்த நாடும் விரும்பவில்லை.
EPFO குட் நியூஸ்.. வட்டி விகிதத்தை உயர்த்த இறுதி முடிவு..!
யாரும் எண்ணெய் வாங்க கூடாது?
அந்த காலகட்டத்தில் தான் பல வருடங்களாக ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்த இந்தியா கூட, சவுதியிடம் எண்ணெய் வாங்கும் நிர்பந்தத்திற்கு ஆளானது. இது ஒரு புறம் எனில் மறுபுறம் ஈரான் தனது மொத்த வணிக வீழ்ச்சியினால் பெரும் பொருளாதார வீழ்ச்சியினையும் சந்தித்தது. இதன் பிறகு மறைமுகமாக கூட எண்ணெய் சப்ளை செய்ய தயாராக இருப்பதாக கூறியது. ஆனால் எதுவும் ஈரானுக்கு பெரியதாக கைகொடுக்கவில்லை.
கொரோனாவின் வருகை
இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக கொரோனாவும் உலகில் காலடி வைத்தது. அதோடு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனும் அதிர்ஷ்டவசமாக வெற்றி பெற்றார். இதன் காரணமாக டிரம்பின் கோபத்தில் இருந்து ஈரானுக்கு பெரும் நிவாரணம் கிடைத்தது. எனினும் இன்று வரையில் முழு பிரச்சனையும் முடிந்த பாடாக இல்லை.
அமெரிக்கா – ஈரான் பேச்சு வார்த்தை
எத்தனையோ முறைகள் ஈரானும் அமெரிக்காவும் பேச்சு வார்த்தை நடத்த முற்பட்டன. ஆனால் அவை எதுவும் கைகொடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா ஈரான் கூட பேச்சு வார்த்தை ஈடுப்பட்டுள்ளதால தகவல்கள் வெளியாகின. மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடையை நீக்கம்
இதற்கிடையில் ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்கியுள்ளது அமெரிக்கா. இதனை வரவேற்பதாக கூறியுள்ள ஈரான், இந்த நடவடிக்கைகள் போதாது என்று கூறியுள்ளன. கடந்த 2018 முதல் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடையால் ஈரான் மிக மோசமான வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. எனினும் தற்போது பொருளாதார தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் எண்ணெய் சப்ளையானது மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 வருட உச்சத்தில் இருந்து சரிவு
நாடுகளின் இந்த சுமூகமான நிலையானது எண்ணெய் விலையில் பிரதிபலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் எண்ணெய் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. அதுவும் கச்சா எண்ணெய் விலையானது ஓ-பெக் நாடுகள் உற்பத்தியினை குறைக்கலாம் என்ற நிலையில் 7 வருட உச்சத்தினை எட்டின. எனினும் தற்போது அமெரிக்கா – ஈரான் இடையேயான சுமூக நிலையில் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது.
ஈரானின் பங்கும் உண்டு
அமெரிக்காவின் தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு மத்தியில் ஈரானும் சும்மா இருந்து விடவில்லை. தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை புறக்கணித்தது. இதற்கிடையில் தான் அதிபர் ஜோ பைடனும் இப்படி அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு மீண்டும் அணு சக்தி ஒப்பந்தம் சுமூக முடிவினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
WTI கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 0.16% அதிகரித்து, 91.47 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.வ் இது கடந்த அமர்வில் 93 டாலர்கள் வரையில் சென்ற நிலையில், தற்போது சற்றே தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
பிரெண்ட் கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து ஏற்றத்தினையே கண்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே மட்டுமே பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது பேரலுக்கு சற்றூ அதிகரித்து, 92.78 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த வாரத்தில் 94 டாலர்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எப்படி சாதகம்?
உலக நாடுகளில் அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதியை செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய நிவாரணத்தினை கொடுக்கும். இன்றும் இந்தியாவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது பணவீக்கம், வர்த்தக பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்துள்ளது கச்சா எண்ணெய் இறக்குமதி தான். இவையிராண்டுமே இதன் மூலம் சரியாகலாம். சுமூக நிலையை எட்டலாம். மொத்தத்தில் இந்தியாவுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு எனலாம்.
crude oil prices slips from 7 year high amid US – iran smooth talks
crude oil prices slips from 7 year high amid US – iran smooth talks/இந்தியாவுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு.. 7 வருட உச்சத்திலிருந்து சரிந்த எண்ணெய்.. US-ஈரான் சுமூக நிலை