பெங்களூரு-”உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை, முதலில் கூறுங்கள்,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.பி.பாட்டீலுக்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.பர்தா விவாதத்தை கர்நாடக அரசே உருவாக்கியதாக, எம்.பி.பாட்டீல் குற்றம் சாட்டினார். இவருக்கு பதிலடி கொடுத்து, பா.ஜ., நேற்று கூறியதாவது:நீங்கள் காங்கிரஸ் பிரசார கமிட்டி தலைவர் என்பதால், பரபரப்பாக இருக்கும் நோக்கில், உரையாற்ற சரக்கு தேடாதீர்கள்.சீருடை கட்டுப்பாடு குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு முன், உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை தெளிவுபடுத்துங்கள்.கோவாவில் காங்கிரஸ் அரசு, ஆட்சிக்கு வந்தால் மகதாயி விவாதத்தை, பேச்சு நடத்தி தீர்வு காண்பதாக கூறியுள்ளீர்கள்.அரசியல் நோக்கில் பேசுவதை விட்டு விட்டு, கோவா காங்கிரஸ் தலைவர்களை, இது போன்று கூற வைக்க முடியுமா?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு-”உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை, முதலில் கூறுங்கள்,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.பி.பாட்டீலுக்கு பா.ஜ., பதிலடி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.