உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு வரும் 10 ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* 60 வயதிற்கு மேற்பட்ட மூதாட்டிகளுக்கு மட்டும் அரசு பேருந்தில் இலவச பயணம்,
* கல்லூரி மாணவர்களுக்கு இலவச இருசக்கர வாகனம்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.. மோடி போட்ட “சேம் சைட் கோல்”.. தர்ம சங்கடத்தில் பாஜக..!
* ஹோலிப் பண்டிகை, திபாவளி பண்டிகைக்கு வீட்டுக்கு தலா இரண்டு இலவச காஸ் சிலிண்டர்
* குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
*அனைத்து விவசாயிகளுக்கும் நீர்ப்பாசனத்துக்காக இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச முதல்வர்
யோகி ஆதித்யநாத்
, மத்திய அமைச்சர்
அமித் ஷா
உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கவந்து கொண்டனர்.