தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு, காய்கறி, பால் விற்பனை செய்தும் வித விதமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..
கரூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கள் காலில் விழுந்தும், பொன்னாடை போர்த்தியும் வாக்குகளை சேகரித்தனர்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் சிசர் மனோகர் வாக்கு சேகரித்தார்.அதேபோல், 11 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தாமரை பூவை கையில் வைத்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலத்தின் 144ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் 77 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உணவு கடையில் ஆப்பம் சுட்டு வாக்கு சேகரித்தார். அதேபோல், அதிமுக சார்பில் களம் காணும் வேட்பாளர் மீன் விற்று ஆதரவு திரட்டினார்.
புதுக்கோட்டை நகராட்சி 9வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பால் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார். அதேபோல் 27 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை இராயபுரம் 52 வது வார்டில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ., சைக்கிளில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..