பெங்களூரு:
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…உ.பி. சட்டசபை தேர்தல்: தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்த பா.ஜனதா