தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 11 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக இன்று நீட் விலக்கு மசோதாவுக்காக சிறப்பு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ஆளுநரின் மதிப்பீடுகள் தவறானவை என்றும் பலமுறை தேர்வு எழுதுவோருக்கு மட்டுமே நீட்தேர்வு சாதகமாக உள்ளது என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் இந்த மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதா அவை 142 நாட்களுக்கு பின் ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 1ஆம் தேதி திருப்பி அனுப்பி உள்ள நிலையில் தற்போது மீண்டும் இந்த மசோதா சட்டப் பேரவை நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.