கார்த்திக் நரேனின் ‘
மாறன்
‘ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார்
தனுஷ்
. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. இதனிடையில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘
நானே வருவேன்
‘ படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்..
இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார்.
இந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை இந்துஜா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இவர் ஏற்கனவே விஜய்யின் பிகில், ஆர்யாவின் மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இன்னும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
விஜய்யின் ‘பீஸ்ட்’ புரோமோவில் அஜித்.. இவ்வளவு டீப்பா கவனிக்குறாங்களே..!
அண்மையில் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக தனுஷ் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனுஷ் குறித்து கலக்க போவது யாரு டிஸ்கே பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் எங்கு திறமை இருந்தாலும், அதனை வாழ்த்தி வரவேற்பவர் தனுஷ் என தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வளவு உயரத்திற்கு சென்ற பின்னரும் அந்த குணம் மாறாமல் தனுஷ் இருந்து வருவது ஆச்சரியத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். தனுஷின் ‘மாறன்’ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இதில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!