உத்தரப் பிரதேசம் மாநிலம் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் வெற்றிப்பெறும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரம் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசன் கான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். அதில், உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இடைக்கால ஜாமீன் வழங்ககோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் விசாரிக்க மறுத்துவிட்டது என கூறினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.என்.ராவ் தலைமையிலான அமர்வு, ஆசன் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்ததோடு, இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. விஜயபாஸ்கர் பேச்சால் கூச்சல்- குழப்பம்: அ.தி.மு.க.- காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் மோதல்