தனியாக காவி துண்டு குழுவினரை எதிர்கொள்வதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, மேலும் ஹிஜாப் அணியும் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன் என கர்நாடகா மாணவி முஸ்கான் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் மாண்டியா pre-University கல்லூரியில் தனி ஆளாக, காவி துண்டு குழுவினரை புர்கா அணிந்த மாணவி எதிர்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
காவி துண்டு குழுவினரை தனி ஆளாக எதிர்த்த மாணவி முஸ்கான் சம்பவம் குறித்து கூறியதாவது, நான் கவலைப்படவில்லை. நான் கல்லூரிக்குள் நுழைந்தபோது புர்கா அணிந்திருந்ததால் காவி துண்டு குழுவினர் என்னை அனுமதிக்கவில்லை.
அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கத்த ஆரம்பித்தார்கள். அதனால் நான் அல்லா ஹு அக்பர் என்று கத்த ஆரம்பித்தேன்.
கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் என்னை ஆதரித்து என்னை பாதுகாத்தனர்.
காவி துண்டு குழுவில் இருந்தவர்களில் 10 சதவீதம் பேர் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என எனக்குத் தெரியும், மீதமுள்ளவர்கள் வெளியாட்கள்.
கல்வி தான் எங்களின் முன்னுரிமை. அவர்கள் எங்கள் கல்வியை பாழாக்குகிறார்கள்.
இந்த பிரச்னை கடந்த வாரம் தான் தொடங்கியது. நாங்கள் எப்போதும் பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்திருப்போம். வகுப்பில் ஹிஜாப் அணிந்து பர்தாவை கழற்றிவிடுவேன்.
ஹிஜாப் எங்களின் ஒரு அங்கம். இதற்கு கல்லூரி முதல்வர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வெளியாட்கள் இதை ஆரம்பித்துள்ளனர்.
புர்காவை எடுத்து வர வேண்டாம் என கல்லூரி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
ஹிஜாபுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
இந்து நண்பர்கள் எனக்கு ஆதரவளித்தனர்.
நான் பாதுகாப்பாக உணர்கிறேன், காலையில் இருந்து, நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று எல்லோரும் எங்களிடம் கூறுகிறார்கள் என இரண்டாம் ஆண்டு வணிகவியல் படிக்கும் மாணவி முஸ்கான் தெரிவித்துள்ளார்.