நடிகர் சூர்யாவின் நடிப்பில் TJ
ஞானவேல்
இயக்கத்தில் வெளியான படம்
ஜெய் பீம்
. கடந்தாண்டு வெளியான இப்படத்தை
சூர்யா
தயாரித்திருந்தார். மேலும் மணிகண்டன்,
பிரகாஷ் ராஜ்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இருளர் சமூகத்தைப்பற்றியும், அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் பற்றியும் மிக தத்ரூபமாக எடுத்திருந்தார் இயக்குனர் ஞானவேல்.
OTT யில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இருப்பினும் சில சர்ச்சைகளில் சிக்கியது ஜெய் பீம். அதையும்தாண்டி மக்களின் ஆதரவு இப்படத்திற்கு பெருக்கெடுத்தது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட ஆரம்பித்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த 94 ஆவது
ஆஸ்கார்
விருது வழங்கும் விழா நடக்கவிருக்கிறது.
தனுஷிடம் புதுவிதமாக காதலை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா..இது ரொம்ப புதுசுப்பா..!
இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் ஜெய் பீம் படம் தேர்வாகியிருந்தது. இதனைக்கேட்ட தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். இந்நிலையில் ஆஸ்கார் குழு இன்று மாலை ஆஸ்கார் விருதுக்கான நாமினேஷன் பட்டியலை வெளியிட்டது. இந்த விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் ஜெய் பீம் இடம்பெறவில்லை.
இதனால் ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் உள்ளனர். இந்தியளவில் பெருமை சேர்த்த ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்று உலகளவில் பெருமை சேர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில் தற்போது இறுதிப்பட்டியலில் ஜெய் பீம் படம் இடப்பெறாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
இருப்பினும் ஆஸ்கார் போன்ற உயரிய விருதில் ஜெய் பீம் திரைப்படம் இறுதிவரை வந்ததே தமிழ் ரசிகர்களுக்கு பெருமையான விஷயமாக கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!