கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று காலை அந்த குறிப்பிட்ட கல்லூரிக்கு ஒரு முஸ்லிம் மாணவி ஹிஜாபுடன் நுழைவதைக் கண்ட 50-க்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள், அந்தப் பெண்ணை நோக்கி `ஜெய் ஶ்ரீராம்’ என கோஷமிட்டனர். அந்த பெண்ணும் பதிலுக்கு `அல்லாஹு அக்பர்’ எனக் கோஷமிட, அவரை `ஜெய் ஶ்ரீராம்’ என கோஷமிட்டபடி இந்து மாணவர்கள் தொடர்ந்து சென்றனர். பின்னர், அந்த மாணவியை ஆசிரியர் ஒருவர் பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.
இந்த நிலையில், கர்நாடக விவகாரம் மக்களவையிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் மக்களவையிலிருந்து கர்நாடகாவில் நடக்கும் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க, சி.பி.ம், சி.பி.ஐ, வி.சி.க, எம்.டி.எம்.கே மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் ஜெ.எம்.எம் (Jharkhand Mukti Morcha) ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மாநிலம் முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறை அளித்திருக்கிறது.
Also Read: ஹிஜாப் விவகாரம்: `அடுத்த 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!’ – கர்நாடக முதல்வர் அறிவிப்பு