புதுடில்லி :நிபுணர் குழு அறிவுரைப்படி, 15 வயதிற்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5 கோடி பேர்
நேற்று ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:தற்போது நாடு முழுதும், 15 – 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இப்பிரிவில் இதுவரை, 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 5 கோடி பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுஉள்ளது.பள்ளிகள் திறக்கப்படுவதால், 15 வயதிற்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுவது குறித்து வல்லுனர்கள் குழுவிடம் ஆலோசனை பெறப்பட்டு முடிவு செய்யப்படும்.
இந்தியாவில், தகுதியுள்ளோரில், 97.5 சதவீதம் பேருக்கு முதல், ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; 77 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வளர்ந்த
நாடுகளில் கூட, 90 சதவீதத்திற்கு மேல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
ஆராய்ச்சி கவுன்சில்
கொரோனா பரவலை பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாக கையாண்டு வருகிறது. தடுப்பூசியால் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருந்தது.தற்போது சர்வதேச அறிவியல் மையங்களும் ஒப்புக் கொண்டுஇருப்பது மகிழ்ச்சி
அளிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்படும் இறப்பு விபரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றன. இதுவரை எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேச அரசுகளும் ஆக்சிஜன்
பற்றாக்குறையால் இறப்பு நேர்ந்ததாக தெரிவிக்கவில்லை. பாரதி பிரவின் பவார், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்
Advertisement