எந்தவொரு முதலீட்டு திட்டமாக இருந்தாலும் நன்மை தீமை உண்டு. அந்த வகையில் தேசிய ஓய்வூதிய திட்டம் முழுமையாக ஓய்வுகாலத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மற்ற திட்டங்களை காட்டிலும் இந்த திட்டத்தில் குறைந்த செலவினைக் கொண்டுள்ளது. இது ஒரு நெகிழ்வுதன்மையை கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக வரிச்சலுகையும் உண்டு.
3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
வரிச்சலுகையுடன் இந்த திட்டத்தில் இருந்து வாங்குவதற்கும், வெளியேறுவதற்கும் குறைந்த செலவை வழங்குகிறது. இது 80சிசிடி (1 பி)ன் படி 50,000 ரூபாய் வரையில் வரிச்சலுகை கிடைக்கும். இதே 80சி-யின் கீழ் 1,50,000 ரூபாய் வரையில் வரிச்சலுகை கிடைக்கும்.
தேசிய ஓய்வூதிய திட்டம்
யார் வேண்டுமானாலும் இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தினை தொடங்கிக் கொள்ளலாம். அதில் பணிக்காலத்தின் போது ஓய்வூதிய கார்பஸ் இதன் மூலம் சேமிக்கப்படும். இந்த திட்டத்தினை அனைவரும் தொடங்கிக் கொள்ளலாம் என்றாலும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கட்டாயமாகும். இது ஓய்வு காலத்திற்கு பிறகு மக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
லாக் இன் காலம்
இந்த திட்டத்தின் லாக் இன் காலம் 10 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு முதலீட்டாளர் 20% மொத்த தொகையாகவும், 80% ஆண்டு தொகையாகவும் பெற்றுக் கொள்ளலாம். இதில் மொத்த முதலீட்டு தொகையானது 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், ஒரே தொகையாகவே எடுத்துக் கொள்ளலாம்.
3 நாமினிகள்
ஓய்வூதிய வயதிற்கு பிறகும் தொடர்ச்சியான பங்களிப்பு மற்றும் ஒத்தி வைப்பு மூலம் 75 வயது வரையில் இந்த திட்டத்தினை தொடர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் நாமினி வசதியும் உண்டு. மூன்று நாமினிகள் வரை நியமித்துக் கொள்ளலாம். நாமினிகளும் இதனை மொத்த தொகையாகவோ அல்லது வருடாந்திர தொகையாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
யார் முதலீடு செய்யலாம்?
இந்த திட்டத்தினை தங்களது ஓய்வூகாலத்திற்கு மாத மாதம் வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள் முதலீடு செய்யலாம். எனக்கு எந்த ரிஸ்கும் எடுக்க விரும்பவில்லை. வருமானம் ஓரளவு கிடைத்தால் போதும். அதோடு நான் செய்யும் முதலீடுக்கு வரிச் சலுகையும் வேண்டும். நீண்டகால நோக்கில் இந்த திட்டத்தினை தொடர்ந்து கொள்ளலாம் என நினைப்பவர்காள் மட்டுமே தொடர்ந்து கொள்ளலாம்.
NPS: who should look at this investment options?
NPS: who should look at this investment options?/NPS திட்டம்.. வரியை மிச்சப்படுத்தி சேமிக்க சிறந்த வழி.. யாரெல்லாம் இணையலாம்..!