இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி, முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது. இந்த குழுமத்தினை சேர்ந்த அதானி வில்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பங்கு வெளியீட்டினை செய்தது.
இந்த நிலையில் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. சமீப காலமாக பட்டியலிப்பட்ட சில பங்குகளில் சோமேட்டோ, தவிர மற்ற பங்குகள் பிரீமிய விலையில் பட்டியலிடப்பட்டது.
3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி வில்மர் பங்கு 3.91% டிஸ்கவுண்ட் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட விலை
இன்று என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்ட நிலையில், தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்ட இந்த பங்கின் விலையானது, 221 ரூபாயாக இருந்தது. இது ஐபிஓ விலையானது 230 ரூபாயாகும். நிபுணர்கள் பலரும் இந்த பங்கின் விலையானது 230 ரூபாயாக வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிஓ தொடக்கம்
3,600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்த அதானி வில்மர், அதன் பங்கு விலையை 218 – 230 ரூபாயாக நிர்ணயம் செய்திருந்த நிலையில், அதன் சந்தை மதிப்பானது 28,72 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கிடையில் 3.19 லட்சம் பங்குகள் கைமாறின. பி.எஸ்.இ-யில் 7.03 கோடி ரூபாய் இன்று மட்டும் டர்ன் ஓவர் ஆகியுள்ளது.
புதிய முதலீட்டாளர்கள் திட்டம்
புதிய முதலீட்டாளர்கள் இந்த பங்கினை வாங்க இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. எனினும் ஸ்டாப் லாஸ் 200 ரூபாய் என்ற லெவலை வைத்துக் கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக இது மிகச்சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது.
பிஎஸ்இ-யில் என்ன நிலவரம்
பிஎஸ்இ-ல் அதானி வில்மர் பங்கின் விலையானது 15.30% அதிகரித்து, 265.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 265.20 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 221 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலையும், 52 வார குறைந்தபட்ச விலையும் இது தான்
என்எஸ்இ-யில் என்ன நிலவரம்
என்எஸ்இ-யில் அதானி வில்மர் பங்கின் விலையானது 17.17% அதிகரித்து, 269.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 269.75 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 227 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலையும், 52 வார குறைந்தபட்ச விலையும் இது தான்.
ஏன் வாங்கலாம்
சில்லறை வர்த்தகர்கள் 3.92 மடங்கு விண்ணப்பம் செய்திருந்தனர். நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 56.3 மடங்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியாவில் சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னோடியாக உள்ள அதானி வில்மர், 10 மாநிலத்தில் சுமார் 22 உற்பத்தி ஆலைகளை வைத்துள்ளது இந்தியா முழுவதும் சுமார் 5,500 வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கொண்டு உள்ளது. இதன் தேவையானது வலுவாக உள்ள நிலையில் இதன் விலை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
Adani wilmar stocks jump 15% above in first day
Adani wilmar stocks jump 15% above in first day/அதானி குழும பங்கினால் செம லாபம்.. முதல் நாளே அள்ளிக் கொடுத்த அதானி வில்மர்..!