ரஷ்யா அரசு நாளுக்கு நாள் உக்ரைன் எல்லையில் தனது படைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு மத்தியில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் உக்ரைன்-க்கு ஆதரவாக அமெரிக்க அரசு நிற்கும் நிலையில், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்யாவை மிரட்டியுள்ளார்.
ரஷ்யா விளாடிமிர் புடின்
விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா சுமார் 1,00,000த்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் உக்ரைன் எல்லையில் வைத்துக்கொண்டு உள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் களமிறங்கிய நிலையில் உக்ரைன் எல்லையில் NATO படைகள் களமிறக்கப்பட்டு உள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ஜோ பைடன்
இதற்கிடையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் ஜெர்மன் நாட்டின் புதிய தலைவரான ஓலாஃப் ஸ்கோல்ஸ்-ஐ நேரடியாகச் சந்தித்து ஆதரவைப் பெற்றார். ரஷ்ய – உக்ரைன் பிரச்சனையில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்குப் பெரிய பலத்தைக் கொடுக்கிறது.
நார்டு ஸ்ட்ரீம் 2 திட்டம்
ஜோ பைடன் – ஓலாஃப் ஸ்கோல்ஸ் சந்திப்பிற்குப் பின்பு பைடன் பேசுகையில், ரஷ்யா தனது ராணுவப் படைகள் உடன் மீண்டும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தால், ரஷ்யா – ஜெர்மனி மத்தியிலான எரிவாயு பைப்லைன் திட்டமான நார்டு ஸ்ட்ரீம் 2 திட்டம் நிறுத்தப்படும். அமெரிக்கா கட்டாயம் இத்திட்டத்தைக் அழிக்கும் எனப் பைடன் தெரிவித்தார்.
ஜெர்மனிக்கும் பாதிப்பு
நார்டு ஸ்ட்ரீம் 2 திட்டம் நிறுத்தப்பட்டால் ரஷ்யாவிற்குப் பொருளாதார வகையில் பாதிப்பு ஏற்பட்டாலும், ஜெர்மனிக்கும் எரிவாயு சப்ளையில் பாதிப்பு ஏற்படும். நார்டு ஸ்ட்ரீம் 2 திட்டத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
NATO படை
மேலும் பைடன் மேற்கத்திய நாடுகளின் கூட்டத்தில் உக்ரைன் இல்லாத போதும், அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்க்கத் தயாராக உள்ளோம். NATO படையும் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் மத்தியில் போர் வெடிக்கும் முன்பு நிறுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்கா தனது ஆதிக்கத்தைக் காட்ட நினைக்கிறது.
விளாடிமிர் புடின் – இமானுவேல் மக்ரோன்
ஜோ பைடன் – ஓலாஃப் ஸ்கோல்ஸ் சந்திக்கும் இதேவேளையில் மாஸ்கோவில் விளாடிமிர் புடின் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் உடன் 5 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே ரஷ்யா சீனாவின் ஆதரவைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளாடிமிர் புடின் பதிலடி
விளாடிமிர் புடின் இந்தச் சந்திப்பிற்குப் பின்பு ரஷ்யா இந்த நாட்டிற்குள்ளும் நுழையவில்லை, அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தான் நுழைகிறது என மேற்கத்திய நாடுகளின் கூட்டத்தில் உக்ரைன் இல்லாததைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
Biden threatens russia to put end to Nord Stream 2; Russia’s Vladimir Putin retorted
Biden threatens russia to put end to Nord Stream 2; Russia’s Vladimir Putin retorted ரஷ்யாவை மிரட்டும் பைடன்.. விளாடிமிர் புடின் கொடுத்த பதிலடி..!