கொழும்பு: மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, இலங்கை வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கில்மா தகநாயக்க கூறியதாவது: இலங்கையில் அரிசி விலை கடும் உச்சத்தில் இருக்கிறது. மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன், மியான்மரில் இருந்து ஒரு லட்சம் டன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மே மாதம் வரை இந்த இறக்குமதி நடக்கும். ஒரு நபருக்கு ஆண்டுக்கு 105 கிலோ அரிசி தேவைப்படுகிறது. நாட்டின் ஓராண்டுக்கான அரிசி தேவை 20 லட்சம் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கொழும்பு: மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, இலங்கை வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.