கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 2019 முதல் 2021 வரை 8 லட்சத்து 25 ஆயிரம் வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானத் ராய் பதிலளிக்கையில், 26 ஆயிரத்து 599 பேர் விசாவுக்கான காலக்கெடு முடிந்தும் இந்தியாவில் தங்கி இருந்ததாகவும், அப்படி இருந்தவர்கள் குறித்து உண்மைத்தன்மை அறிந்து விசா நீட்டிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.