தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான
தனுஷ்
, ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் திடீரென கடந்த மாதம் 17ஆம் தேதி பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
விவாகரத்து தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்திருந்தனர்.
இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனாலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. வழக்கமான குடும்ப தகராறுதான். அவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.
Samantha: யாரும் என் பேரை சொல்றது இல்லது.. இப்படியெல்லாம் தான் கூப்பிடுறாங்க..!
தனுஷ், ஐஸ்வர்யா இருவரையும் திருப்பதிக்கு அனுப்ப கஸ்தூரி ராஜா திட்டமிட்டுள்ளதாக அண்மையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து யூடிப்பில் பேட்டியளித்துள்ள
பயில்வான் ரங்கநாதன்
, இந்த தகவல் உண்மைதான் என கூறியுள்ளார். கஸ்தூரி ராஜா தொடர்ச்சியாக தனுஷை வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யாவிடம் லதா
ரஜினிகாந்த்
‘அப்பா மிகவும் கோபாமா இருக்காரு. பசங்களுக்காக மீண்டும் சேர வேண்டும்’ என வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் உணர்ச்சிவசப்பட்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இருவரும் மீண்டும் இணைய நெறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!