தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. 33 நாள்களுக்கு பிறகு, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
நேற்று 4,519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நான்கு வாரங்களுக்கு பிறகு 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.
கொரானா மூன்றாம் அலை வேகம் எடுத்த போது, ஜனவரி 6ஆம் தேதி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. பின்னர், ஜனவரி 13 அன்று கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.
நேற்றை பாதிப்பில், சென்னையில் 792 பேரும், கோவையில் 778 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 398 பேரும், திருப்பூரில் 276 பேரும், ஈரோட்டில் 246 பேரும், சேலத்தில் 251 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100க்கும் அதிகமாக பதிவாகியிருந்தது. காஞ்சிபுரத்தில் 106 பேரும், குமரியில் 122 பேரும், நாமக்கல்லில் 120 பேரும், திருவள்ளுரில் 192 பேரும், திருச்சியில் 123 பேரும் பாதிக்கப்பட்டனர்.
மாநிலத்தின் மொத்த பாதிப்பு 34 லட்சத்து 20 ஆயிரத்து 505ஆக உள்ளது. நேற்று 37 பேர் உயிரிழந்ததையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 809ஆக உள்ளது.
மொத்தம் 18 மாவட்டங்களில் கொரோனா இறப்பு பதிவாகியுள்ளது. அதில், சென்னையில் 11 பேரும், கோவையில் 4 பேரும் ஆவர்.
தற்போது வீட்டு தனிமை உட்பட 90,137 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சென்னையில் 12,215 பேரும், கோவையில் 11,127 பேரும் அடங்கும். மாநிலத்தின் தினசரி பாதிப்பு விகிதம் 3.9 சதவீதமாக உள்ளது.
நேற்று 1 லட்சத்து 66 ஆயிரத்து 786 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி எண்ணிக்கை 9 கோடியே 42 லட்சத்து 24 ஆயிரத்து 826 ஆகும். இதுவரை செலுத்தப்பட்ட முன் எச்சரிக்கை டோஸூன் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 48 ஆகும்.