கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இது குறித்து குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பதிவில், “கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் சார்ந்தது. விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் என்பது உங்கள் மதத்தைக் காட்டுவதற்கான இடம் அல்ல. ஒரு இந்தியராக நம் பலத்தைக் காட்டுங்கள். இதை வைத்து அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு அவமானம்.
நம் பள்ளி நாள்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம். என் பள்ளி நாள்களிலும் ஏன், என் குழந்தைகள் பள்ளி நாள்களிலும் கூட மாணவர்கள் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்ததை நான் பார்த்தது இல்லை. நான் யாரையும் குறை கூறவில்லை. உங்கள் மதத்தை பேட்ஜாக பள்ளிக்கு அணிந்து வர வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்?பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா? ” எனப் பதிவிட்டுள்ளார்.
Also Read: “இனி காங்கிரஸ் எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரவே வராது!” – கொந்தளிக்கும் குஷ்பு