சென்னை: நீட் மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்கு உட்பட்டு மறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர் என கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்று விரைந்து வினைப்படுகிறார் முதலமைச்சர் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மேலும் முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எனவும் வைரமுத்து பாராட்டியுள்ளார்.