வடக்கு டெல்லி புராரி பகுதி பார்சிராம் என்கிளேவ் அருகே உள்ள யமுனா புஷ்டா என்ற இடத்தில் ரத்த கறைகளுடன் சாக்கு பை மூட்டை ஒன்று கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சாக்கு பையை மீட்டு சோதனை செய்ததில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வடக்கு துணை போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி கூறியதாவது:-
சாக்கு பையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருந்தது. உடலில் வாய் மற்றும் வலது கால் விரவில் சிறிது ரத்தம் கசிந்து இருந்ததைத் தவிர, வெளிப்புற காயங்கள் எதுவுமின்றி இருப்பது கண்டறியப்பட்டது.
சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த நபரை அடையாளம் காண விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.