இந்தியாவில் மிக பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக அதானி உள்ளது. இந்த குழுமத்தினை சேர்ந்த அதானி வில்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பங்கு வெளியீட்டினை செய்தது.
நேற்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி வில்மர், ஆரம்பத்தில் 3.91% டிஸ்கவுண்ட் விலையில் பட்டியலிடப்பட்டது.
தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்ட இந்த பங்கின் விலையானது 221 ரூபாயாக இருந்தது. இது ஐபிஓ விலையானது 230 ரூபாயாகும்.
ஆசியாவிலேயே இனி அதானி தான் நம்பர் 1.. அம்பானி-க்கு எந்த இடம்..!
20% ஏற்றம்
அதானியின் 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டில், பங்கு விலையை 218 – 230 ரூபாயாக விலையை நிர்ணயம் செய்திருந்தது. தள்ளுபடி விலையில் பங்குகள் பட்டியலிடப்பட்டிருந்தாலும், புதிய முதலீட்டாளர்கள் இந்த பங்கினை வாங்க இது சரியான நேரமாக பார்த்தனர். உண்மையில் சரியான வாய்ப்பாக பார்க்கப்பட்ட நிலையில் தான் இரண்டாவது நாளாகவும் 20% அதிகரித்து காணப்படுகின்றது.
பிஎஸ்இ-யில் என்ன நிலவரம்
பிஎஸ்இ-ல் அதானி வில்மர் பங்கின் விலையானது 19.98% அதிகரித்து, 318.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 318.20 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 272.30 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 318 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 221 ரூபாயாகவும் உள்ளது.
என்எஸ்இ-யில் என்ன நிலவரம்
என்எஸ்இ-யில் அதானி வில்மர் பங்கின் விலையானது 20% அதிகரித்து, 321.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 321.90 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 272 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 321.90 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலையு 221 ரூபாயாகவும் உள்ளது.
சந்தை மதிப்பு என்ன?
இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 40,614 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்தம் 26.31 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன. மொத்தத்தில் கடந்த 2 அமர்வுகளில் 42.46% இந்த பங்கின் விலையானது அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதன் தேவையானது வலுவாக உள்ள நிலையில் இதன் விலை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். இதனை மெய்பிக்கும் விதமாக இந்த பங்கின் விலையானது அதிகரித்து வருகின்றது.
Adani wilmar stocks jump 20% above in second day
Adani wilmar stocks jump 20% above in second day/ 2வது நாளாக அதானி கொடுத்த வாய்ப்பு.. முதலீட்டாளர்களுக்கு இது பொற்காலம் தான்..!