வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாடிகன்: சிறார் பாலியல் தொல்லை விவகாரத்தில் முன்னாள் போப் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
இத்தாலி நாட்டின் வாடிகன் நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற கத்தோலிக்க தேவாலய தலைமையத்தில் கடந்த 1980ஆம் ஆண்டு தேவாலயத்தில் இருந்த பாதிரியார்கள் சிலரால் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாக முன்னதாக செய்தி வெளியானது. இது பெரும் கண்டனத்தை பெற்றது. உலகம் முழுக்க சமூகவலைதளத்தில் முனீச் கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் மீது சர்ச்சை எழுந்தது.
அந்த சமயத்தில் தேவாலயத்தின் போப் ஆக பதவி வகித்தவர் 16வது பெனடிக்ட். 94 வயதான இவர் தனது உடல் நலக்குறைவு காரணமாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தான் தலைமை போப் ஆக பதவி வகித்த காலகட்டத்தில் நடந்த இந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார். சிறார் அத்துமீறல் தொடர்பாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கில் பெனடிக்ட் வயோதிகம் காரணமாக ஆஜர் ஆக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் போட்டுக் காட்டப்பட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பெனடிக்ட் போப் பதவியில் இருந்து விலகியபோது, 1980ம் ஆண்டு தேவாலய வளாகத்தில் சிறார் பாலியல் அத்துமீறல் நடப்பது தெரிந்தும் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement