கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொகா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதைதொடர்ந்து 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதனால் 3 நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையை உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் என நீதிபதி கிருஷ்ணா தீட்சித் அறிவித்துள்ளார்.
மேலும், கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் எழுந்து வரும் நிலையில் பெங்களூரு காவல்துறை ஆணையர் கமல் பண்ட்,பெங்களூரு நகரில் கூட்டங்கள் நடத்தவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இரண்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளார்.