சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 2022 -ஐ முன்னிட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத மற்றும் விதிமீறல் தொடர்பாக 12 புகார்கள் பதியப்பட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 2022 -ஐ முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடைத்தை விதிகள் அமலில் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 45 பறக்கும் படை குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய, 12 விதிமீறல் தொடர்பாக சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக 7 புகார்களும், விளம்பர பலகைகள், கொடி தோரணங்கள், பேரணி, விதிமீறிய கூட்டம் மற்றும் அனுமதி இன்றி பிரச்சாரம் போன்ற விதிமீறல்கள் தொடர்பாக தலா ஒரு புகார் என 5 புகார்களும் அடங்கும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் மீது மாநகரட்சி ஆணையர், மாவட்ட தேர்தல் அலுவர் ககன்தீப் சிங் பேடி அவர்களின் ஆணைப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.