மூன்றாம் காலாண்டில் இலாபம் வீழ்ச்சி, மின்னணு சிப் தட்டுப்பாடு ஆகியவற்றால் டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு வாகன உற்பத்தி இலக்கை 90 இலட்சத்தில் இருந்து 85 இலட்சமாகக் குறைத்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாம் காலாண்டில் டொயோட்டா நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபம் 50 ஆயிரத்து 880 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 21 விழுக்காடு குறைவாகும்.
வாகன உற்பத்திக்கான மின்னணுச் சிப்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான வாகன உற்பத்தி இலக்கை டொயோட்டா நிறுவனம் குறைத்துள்ளது.