கொடைக்கானலில் செல்பி எடுக்கும் போது 1,500 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞரின் உடல் 8 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டது.
கடந்த வார புதன்கிழமை, ராம்குமார் என்ற இளைஞர், தடை செய்யப்பட்டுள்ள ரெட் ராக் பகுதியில் உள்ள பாறையின் முனையில் நின்று செல்பி எடுத்த போது தவறி பள்ளத்தாக்கில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை டிரோன் கேமரா உதவியுடன் 1,500 அடி இளைஞரின் உடல் அழுகிய நிலையில் தலையின்றி கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த பனி மூட்டத்துக்கு மத்தியில், 2 நாட்களாக மீட்பு பணிகளை மேற்கொண்ட வனத்துறையினர், உடலை சாக்கு பையில் வைத்து கட்டி, 2,000 அடி நீள ராட்சத கயிறு மூலம் மேலே இழுத்தனர்.
8 நாட்கள் போராடி இளைஞரின் உடலை மீட்ட வனத்துறையினருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இளைஞரின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.